கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் இருக்க முயன்ற டாக்டர்கள் கைது

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு ஆஸ்பத்திரி அருகில் இன்று டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் டாக்டர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர்.
கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் இருக்க முயன்ற டாக்டர்கள் கைது
Published on

சென்னை:

அரசு டாக்டர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய உயர்வை வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு ஆஸ்பத்திரி அருகில் இன்று டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் டாக்டர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com