சென்னையில் மற்றொரு சம்பவம்- ஸ்டான்லி அரசு மருத்துவர் மீது தாக்குதல்

மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதாக புகார்.காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மற்றொரு சம்பவம்- ஸ்டான்லி அரசு மருத்துவர் மீது தாக்குதல்
Published on

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல் என புகார் எழுந்துள்ளது.

மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதாக மருத்துவனை முதல்வர் காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளி இன்று சிகிச்சைக்கு வந்தபோது மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓட்டம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரே நாளில் 2 அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com