தி.மு.க. முப்பெரும் விழா: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு "கலைஞர் விருது"

முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.
தி.மு.க. முப்பெரும் விழா: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு "கலைஞர் விருது"
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா-தி.மு.க. பவள விழா வருகிற 17-ந்தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com