பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி விழா

200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஆங்காடு பகுதி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி விழா
Published on

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா நித்யானந்தம், துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் தனசேகர், பன்னீர்வாக்கம் பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் மோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் டி.உதயகுமார், கே.காமராஜ், நல்லதம்பி, எடப்பாளையம் செந்தில்குமார், மகாராஜன், இலங்காமணி, காந்திநகர் அந்தோணி, தட்சிணாமூர்த்தி, ஆனந்தகண்ணன், எம்.வைகுண்டராஜா, பாபாஜி, முருகேச பாண்டி, முருகக்கனி, முகமது அப்துல்காதர், சங்கரலிங்கம், சண்முகம், ஆர்.பாலமுருகன், சுப்பிரமணி, ராஜ்நாடார், சீனிப் பாண்டியன், ஆண்டனி பீட்டர், உத்திர குமார், ரமேஷ், சுரேஷ், வண்ணை மோகன், எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், ரமேஷ், மடிப்பாக்கம் ரவி, சி.பி.செல்வன், செல்வபாண்டி, ஆத்திசாமி, டாக்டர் பிரேம்சந்த், காசிராஜன், வசந்தகுமார் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com