அரசு பள்ளிக்கு 1.11கோடி செலவில் வகுப்பறை கட்டிடம்- அணுமின் நிலைய இயக்குநர் திறந்து வைத்தார்

கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் கட்டப்பட்டது.அணுமின் நிலைய இயக்குநர் எஸ்.பீ.ஷெல்கே திறந்து வைத்தார்.
அரசு பள்ளிக்கு 1.11கோடி செலவில் வகுப்பறை கட்டிடம்- அணுமின் நிலைய இயக்குநர் திறந்து வைத்தார்
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், அப்பகுதி நகரியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.11 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அணுமின் நிலைய இயக்குநர் எஸ்.பீ.ஷெல்கே திறந்து வைத்தார்.

விழாவில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், நிலைய கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், பள்ளி தலைமை ஆசிரியை லலிதா, அணுமின் நிலைய சமூக பொறுப்பு குழுவினர், ஆசிரியர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com