14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை- தருமபுரி மகிளா கோர்ட்டு தீர்ப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை- தருமபுரி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
Published on

தருமபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மேட்டுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் முபாராக் (வயது26). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அந்த பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 21.4.2022-ந் தேதியன்று முபாராக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தருமபுரி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து முபாராக்கை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com