காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் உற்சவம்

மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். “ஓம் சக்தி,பராசக்தி” கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் உற்சவம்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி நேற்று இரவு தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மஞ்சள் நிற பட்டு உடுத்தி சாமந்தி பூ மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com