12-ம் வகுப்பு விடைத்தாள் நகல்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

மார்ச் 2026 மேல்நிலைத் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் டவுன்லோடு செய்வது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு விடைத்தாள் நகல்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Published on

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 2026 மேல்நிலைத் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் 05.06.2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 16.06.2026 (செவ்வாய்க்கிழமை) வரை விடைத்தாள் நகலினை பாடவாரியாக பல்வேறு கட்டங்களாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Higher Secondary Examination என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் a Higher Secondary March 2026 Scan Copy Download என்ற வாசகத்தினை click செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பாடவாரியான விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாட்களின் விவரங்கள் இவ்வலுவலகத்தின் மூலம் அவ்வப்போது செய்திக்குறிப்பாக ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்.

இவ்விவரத்தினை wwwdge.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். 05.06.2026 அன்று எந்தப் பாடங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்ற விவரமும் 04.06.2026 நாளிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது 06.06.2026 அன்று பிற்பகல் முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்வதற்கான பாடங்களின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com