திருவண்ணாமலையில் தேரோட்டத்தின்போது பரபரப்பு- மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்

அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.தேரோட்டாத்தை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் கோவிலை சூழ்ந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் தேரோட்டத்தின்போது பரபரப்பு- மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்
Published on

திருவண்ணாமலையில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

தேரோட்டாத்தை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையை சூழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் சிலர் காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறைவான மின்சாரம் பாய்ந்ததால் பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது மாட வீதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதை அறிந்த காவல்துறையினர் மின்சாரம் நிறுத்தப்பட்டு பக்தர்களை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com