டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: தமிழகம் உட்பட நாடு முழுவதும் சோதனை.. பாதுகாப்பு அதிகரிப்பு

24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: தமிழகம் உட்பட நாடு முழுவதும் சோதனை.. பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அம்மாநிலத்தில் முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்திலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

மேலும் தமிழ்நாடு உட்பட முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com