கள்ளசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு

அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.பலர் கவலை கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு
Published on

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த மதன் (46) என்பவர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் பலர் கவலை கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com