கள்ளச்சாராயம் விவகாரம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை- இதுவரை 18 பேர் உயிரிழப்பு

அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் விவகாரம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை- இதுவரை 18 பேர் உயிரிழப்பு
Published on

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்கிற மூதாட்டி, மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, வடிவு, நாராயணசாமி, ராமு உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த 80 பேரில், மேலும் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com