சீதாராம் யெச்சூரி மறைவு- தமிழக ஆளுநர் இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மறைவு- தமிழக ஆளுநர் இரங்கல்
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

"மூத்த சிபிஐ-எம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய அரசியலில் அவர் ஆற்றிய தாக்கம் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். ஓம் சாந்தி!" - ஆளுநர் ரவி.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com