கர்நாடக போலீசார் என மிரட்டல்- செஸ் சாம்பியன் ஆனந்தின் உறவினரை டிஜிட்டல் கைது செய்ய முயற்சி

வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
கர்நாடக போலீசார் என மிரட்டல்- செஸ் சாம்பியன் ஆனந்தின் உறவினரை டிஜிட்டல் கைது செய்ய முயற்சி
Published on

சென்னை:

சர்வதேச செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனார் ஆனந்த் 81 வயதான இவர் கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் வசித்து வருகிறார். இவரது செல்போனில் கடந்த 18-ந் தேதி வாட்ஸ் அப் அழைப்பு வந்து உள்ளது.

அதில் பேசிய நபர் தன்னை கர்நாடக மாநில போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி உள்ளார். அப்போது அவர் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகாவில் வாடகை கார் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கார் பெரிய அளவில் விபத்தில் சிக்கி உள்ளது. பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உங்க வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

இருப்பினும் உஷாரான ஆனந்தின் மாமனார் போலியான நபர் யாரோ நம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்து இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் தப்பியது.

இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை உள்ளிட்ட வெளிமாநில போலீசார் பேசுவது போல மிரட்டி செஸ் சாம்பியன் ஆனந்தின் மாமனாரை மர்மநபர் டிஜிட்டல் முறையில் கைது செய்ய திட்டமிட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com