15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவேண்டும் - கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு இந்த 15 நாட்களில் 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி தண்ணீர் திறக்க CWMA உத்தரவு!
Published on

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நேற்று காவிரி ஒழுங்குமுறைக்குழு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி நீர் திறக்க பரிந்துரைத்ததை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்தநிலையில், இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகவிற்கு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

கூட்டத்தில் கர்நாடகா முன்வைத்த வாதம் என்ன?

காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும், தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா வாதிட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,748 கன அடி நீர் பாய்ந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை பிலிகுண்டுலுவில் 178 கன அடி நீர் மட்டுமே பாய்வதாக கர்நாடகா தெரிவித்தது.

காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களில் தற்போது 36.69 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 99 டிஎம்சி அளவை விடக் கணிசமாகக் குறைவு என்றும் தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com