விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்ட 26 பேர் தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

திருச்சியில் இருந்து செல்லும் பயணிகள் அரிய வகை உயிரினங்களை கடத்தி செல்கின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பினால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.
விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்ட 26 பேர் தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
Published on

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்பட பல பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்களை கடத்தி செல்கின்றனர்.

அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்வதற்காக நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

இதே போல் இன்றும் 17 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பினால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 5 பயணிகள் மட்டும் விமானத்தில் பயணம் செய்தனர். மீதமுள்ள 12 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

நேற்று 14 பயணிகளும் இன்று காலை 12 பயணிகளும் என மொத்தம் 26 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com