கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு சோதனை- மோப்பநாய் உதவியுடன் நடந்தது

திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு சோதனை- மோப்பநாய் உதவியுடன் நடந்தது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனவா? ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி அவ்வப்போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

அங்கு இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்து வருகிறது. சமீபத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com