தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

அரசு பள்ளிகளில் படித்து அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 50494 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
Students
Published on

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு 2 லட்சத்து 36 ஆயிரம் மாணவ-மாணவிகள் தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 50494 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 46,604 பேருக்கு தர வரிசை எண் வழங்கப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு இன்றும் நாளையும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் 750 இடங்களுக்கு 159 பேரும், விளையாட்டு பிரிவு 38 இடங்களுக்கு 525 பேரும், முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு 11 இடங்களில் 14 பேரும் அழைக்கப்பட்டனர்.

15-ந் தேதி முதல் பொதுப் பிரிவு - சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இது 4 நாட்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பொது கலந்தாய்வு 20-ந் தேதி தொடங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com