தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு- சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரம் மோசம்

சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு- சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரம் மோசம்
Published on

தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் நேற்று முதலே பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே புகைமூட்டமாக மாறியது. நேற்று முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியதால், பனியும், புகைமூட்டமும் சேர்ந்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.

சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 148, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தர குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது.

கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com