அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடங்கியது- மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடங்கியது- மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட் கிழமை) தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.

இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும். பொது கலந்தாய்வு முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 10-ந்தேதி வரையும் 2-ம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ந்தேதி வரையும் நடைபெறும்.

தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன.

கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com