இனி ஆன்லைனில்.. அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை- அமைச்சர் ரமேஷ்

அனைத்து டெண்டர்களுக்கும் ஜி.எஸ்.டி, பான் கட்டாயம்.
Minister Ramesh
Published on

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவான டெண்டர்

அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் வழிகாட்டுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான டெண்டர் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

அனைத்து கோவில்களுக்கும் உறுதிமொழி படிவங்கள் டெண்டருக்கான விண்ணப்பங்கள் எல்லாவற்றுக்கும் முறையான ஒரே மாதிரியான படிவங்களை கொண்டு வந்துள்ளோம்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதை கொண்டு வந்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறையில் இருக்கக் கூடிய அனைத்து டெண்டர்களும் இனிமேல் ஆன்லைனில் நடைபெறும்.

ஆன்-லைனில் டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளி கோருதலும் நடக்கும், அதற்கான ஏலமும் ஆன்-லைனில் நடைபெறும்.

இதற்கு முன்பு பல கோவில்களில் இ.எம்.டி. என்கிற வைப்புத்தொகை கோவிலுக்கு கோவில் சில இடங்களில் மாறுபட்டு இருந்தது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பொதுவாக கொண்டு வந்துள்ளோம்.

அனைத்து டெண்டர்களுக்கும் ஜி.எஸ்.டி, பான் கட்டாயம். அது இல்லாமல் எந்த டெண்டரையும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஒருவருக்கே காண்டிராக்ட் கொடுக்காமல் 2-3 பேருக்கு பிரித்து கொடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். டெண்டரில் உள்ள விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com