தமிழகம் முழுவதும் பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும்- குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.சென்னையில் நடந்த ஆய்வின்போது மாணவர்கள் தங்கும் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என கண்டறிந்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும்- குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி
Published on

சென்னை:

இந்நிலையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணைய உறுப்பினர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று ஆய்வு செய்தனர். பள்ளியில் உள்ள விடுதிக்கு சென்று, விடுதி சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் தங்கும் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு தங்கி படித்து வரும் 50 மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், சென்னையில் விடுதிகளுடன் இயங்கும் 13 பள்ளிகளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறிய ஆணைய தலைவர், தமிழகம் முழுவதும் விடுதிகளுடன் இயங்கும் பள்ளிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படும் என்ற தகவலையும் கூறினார். தவறு செய்யும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் ஆணைய தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com