'சூப்பர் பவர்' இருப்பதாக நினைத்து 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவர்

மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.
'சூப்பர் பவர்' இருப்பதாக நினைத்து 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவர்
Published on

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பிரபு (19) என்ற மாணவர் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை திடீரென கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

மாணவர்கள் விடுதியின் 4வது மாடியில் இருந்து பிரபு கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்ததுடன் அதுபோன்ற பவர் தனக்கு இருப்பதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார். தனக்கு யாரோ ஒருவர் சூனியம் வைத்ததாகவும், கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.

தனக்கு சூப்பர் ஹீரோக்கள் போன்ற சூப்பர் பவர் இருப்பதாகவும், அதனால் எந்த கட்டிடத்தில் இருந்தும் தன்னால் குதிக்க முடியும் என்றும் பிரபு நம்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com