மதுரை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் கைது

கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர்.
மதுரை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் கைது
Published on

மதுரை:

மதுரை அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாணவி மதுரையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, மாணவி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க செக்கானூரணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (வயது42), மற்றொரு பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com