ஓட்டி பழகியபோது டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி

மாதேஸ்வரன் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாதேஸ்வரன்
மாதேஸ்வரன்
Published on

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரியபள்ளம் பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 18).

இவர் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.

நேற்று இரவு மாதேஸ்வரன் தனது உறவினரின் டிராக்டரை எடுத்துக்கொண்டு ஓட்டி பழகுவதற்காக அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள வயலில் டிராக்டரை ஓட்டி பழகும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் மாதேஸ்வரன் மேலே டிராக்டர் விழுந்ததால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com