

இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8மணி வரை நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல்வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒத்திகையியின்போது இந்திய கடல்படை வீரர்கள் பயங்கரவாதிகள் போல் கடற்பகுதியில் நுழைய முயல்வதும் அவர்களை பாதுகாப்பு வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து சோதனையின் போது கண்டுபிடிப்பதும் வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 'சாகர் கவாச்-2026' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு தமிழக கடலோரங்களில் தொடங்கியது. அதன்படி மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம், மரக்காணம், பழவேற்காடு, ஆரம்பாக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு கடலோர பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் வாகன சோதனை, கடல்வழி கண்காணிப்பு, சந்தேக நபர்களிடம் விசாரணை என கடல்வழி தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் இந்திய காவல்படை, இந்திய கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமம், தமிழ்நாடு போலீஸ் ஆகியோர் இணைந்து இந்த ஒத்திகையை நடத்துகின்றனர். இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8மணி வரை நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் மீனவர்கள் உதவியுடன் படகுகளில் கடலுக்குள் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது கடலில் மீன் பிடித்து தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் விசாரணை நடத்தி சோதனையில் ஈடுபட்டனர். படகுகளிலும் கடலுக்குள் சென்று ரோந்து சென்றனர். இதில் நீலாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய்ஆனந்த் கூறும்போது, இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது கடலோர காவல் படையினர் சோதனையில் கடலில் மீன் பிடித்து தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மீதங்களின் பயோமெட்ரிக் அடையாள அட்டையும் படகு தொடர்பான ஆவணங்களையும் காண்பிக்க ஏதுவாக உடன் வைத்திருக்க வேண்டும். மேலும் கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது அந்நியர்கள் சந்தேகத்துக்கிடமான நபர்கள் செயல்பாடுகளை கண்டால் கடலோர பாதுகாப்பு உதவி மையத்தின் 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது உள்ளூர் காவல் நிலையங்கள் உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவன் நலத்துறை பொன்னேரி அலுவலகத்திற்கும் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.