தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசனை.
TN CM Vijay
Published on

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் அழைப்பு

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றனர். பாமக பங்கேற்பது குறித்து அன்புமணி இன்று காலை 10 மணியளவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

புறக்கணிப்பு?

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com