மாணவர்களுக்கிடையே மோதல்- ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கிடையே மோதல்- ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு
Published on

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தததை அடுத்து, ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதலால், மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com