சீமான் டுவிட்டர் முடக்கத்திற்கு நாங்கள் காரணமா?- சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்

சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீமான் டுவிட்டர் முடக்கத்திற்கு நாங்கள் காரணமா?- சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்
Published on

சென்னை :

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

டுவிட்டர் கணக்கை முடக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com