திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு

ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு
Published on

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (15), பிரேம் குமார் (14) ஆழமாஜ பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினர்.

ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com