முதலமைச்சர் விஜய் பிறந்த நாள்: ராகுல் காந்தி வாழ்த்து

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
TN CM Vijay- Rahul gandhi
Published on

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும், முயற்சிகள் அனைத்திலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.

தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியத்தை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைப்பதிலும் உங்களுடன் துணை நிற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com