முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு

கடந்த ஆட்சியில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இது 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Chief Minister Morning Food Scheme
முதல்வர் காலை உணவு திட்டம்
Published on

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்திற்கு முதல்வரின் காலை உணவு திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை நீட்டிப்பு

விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

பெயர் மாற்றம்

இந்த நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விடியல் மகளிர் பயணம் என்பது மகளிர் பயணம் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயர் அப்படியே நீடிக்கப்படுகிறது. அம்மா உணவகம் பெயரும் மாற்றப்படவில்லை.

பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை

மாநிலம் முழுவதும் சுமார் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 20.59 லட்சம் குழந்தைகள். 6 முதல் 8-ம் வகுப்பு வரை இத்திட்டம் விரிவாக்கத்திற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் வரை பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com