ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!

ஜூலை.31 முதல் கடைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படாது என, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
Published on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கடைகளில் கோழி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழி எடை மோசடியை தடுக்கக்கோரி இந்த கடையடைப்பை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்., “கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிப்பதில்லை.

கோழிகளுக்கு கடைசி நிமிடம் வரை தீவனம் கொடுப்பதால், அவற்றின் உடலில் தீவனம் தங்கி ஜீரணமாகாமல் அப்படியே இருக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கூடுதல் எடையுடன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தீவனம் ஜீரணிக்காமல் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, இறைச்சியின் தன்மையும், தரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.” என கோழி விற்பனையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து கோழி உற்பத்தியாளர்கள் 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இதனை வலியுறுத்தி தற்போது இந்த விற்பனை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு கோழி இறைச்சி கிடைப்பதில் தற்காலிக தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com