கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம். எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.
கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

X

Maalai Malar
www.maalaimalar.com