நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் எதிரொலியால் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வந்ததால் போராட்டம் வலுவடைந்தது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.
இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வந்த சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை அடுத்து சென்னை தி.நகா் பாலன் இல்லத்தில் 6ஆவது நாளாக போராடி வரும் போராட்டக்காரா்கள் வெற்றி முழக்கமிட்டு கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அடுத்த 2 நாட்களில் நீட் ரத்து என்ற அறிவிப்பை கேட்கவிருக்கிறோம், அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.