தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூயம் வழங்கப்படும்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com