சென்னை சென்ட்ரல் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து

சம்பவத்தால் தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குப்பம் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தபால் நிலைய ஊழியர்களான ரகுபதி மற்றும் சிவா ஆகிய இருவரையும் அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com