அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தொங்கிய கைக்குழந்தை - பதறிய குடியிருப்புவாசிகள்

பத்திரமாக பிடிக்க ஏதுவாக துணியை லாவகமாக பிடித்துக் கொண்டனர். வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தொங்கிய கைக்குழந்தை - பதறிய குடியிருப்புவாசிகள்
Published on

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து ஏழு மாத கைக்குழந்தை ஹைரின் தவறி தகர சீட்டில் விழுந்தது. தவறி விழுந்த குழந்தையை அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் பத்திரமாக மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை விழுந்த தகர சீட்டின் கீழ் தரை தளத்தில் சிலர் ஒன்றுகூடி பெரிய துணியை விரித்து பிடித்தனர். ஒருவேளை குழந்தை தகர சீட்டில் இருந்து கீழே விழும் பட்சத்தில் அதனை பத்திரமாக பிடிக்க ஏதுவாக துணியை அவர்கள் லாவகமாக பிடித்துக் கொண்டனர்.

அதே சமயம் சிலர், குழுந்தையை மீட்க தகர சீட்டின் கீழ் தளத்தில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து பால்கனிக்கு விரைந்தனர். பல்கனி வழியே வெளியே வந்த நபர் ஒருவர், அங்கிருந்த தடுப்பின் மீது ஏறி குழந்தையை தகர சீட்டில் இருந்து பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து தவறி விழுந்த குழந்தையின் பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதியினரிடம் திருமுல்லையாவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com