"ஊட்டச்சத்து மாதம்" அங்கன்வாடிகளை ஆய்வு செய்யும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
"ஊட்டச்சத்து மாதம்" அங்கன்வாடிகளை ஆய்வு செய்யும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
Published on

மாமல்லபுரம்:

தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கலர் மாக்கோலம் போடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் அங்கன்வாடி பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com