

திருநெல்வேலி யார்டில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் தாம்பரம் அந்தியோதயா, நெல்லை, செந்தூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு வரும் 21, 22, 23 மற்றும் 25 முதல் 30-ந் தேதி வரை பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய அந்தியோதயா விரைவு ரெயில் நாகர் கோவில்-திண்டுக்கல் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கலில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து-நாகர்கோவிலுக்கு வரும் 20, 21, 22, மற்றும் 24 முதல் 9-ந் தேதி வரை இரவு 10.40 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரெயில், திண்டுக்கல்- நாகர்கோவில் வரை பகுதி ரத்து செய்யப்படும். இந்த ரெயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் 26, 27, 28, 29 ஆகிய தேதியில் 8.50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், வாஞ்சி மணியாச்சி -திருநெல்வேலி இடையே பகுதி ரத்து செய்யப்படும். திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு வரும் 27, 28, 21 ஆகிய தேதியில் இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், திருநெல்வேலி- வாஞ்சி மணியாச்சி இடையே பகுதி ரத்து செய்யப்படும். இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 9.11 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர்- திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரும் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு இயக்கப்படும் செந்தூர் விரைவு எக்ஸ்பிரஸ் திருச்செந்தூர் -விருதுநகர் இடையே பகுதி ரத்து செய்யப்படும். இந்த ரெயில் விருதுநகரில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர்-கன்னியாகுமரி இடையே பகுதி ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.