தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் நடைபெற்றது.கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Published on

சென்னை:

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 95 டி.எம்.சி நிலுவை நீரை வழங்கவேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com