சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய முந்திரி, பாதாம் பாக்கெட்டில் பூச்சி: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
பூச்சி இருந்த முந்திரி, பாதாம் பாக்கெட்
பூச்சி இருந்த முந்திரி, பாதாம் பாக்கெட்
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.

அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com