என்ஜினீயருக்கு கொலை மிரட்டல்: நடிகர் பாபிசிம்ஹா உள்பட 4 பேர் மீது வழக்கு

பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயருக்கு கொலை மிரட்டல்: நடிகர் பாபிசிம்ஹா உள்பட 4 பேர் மீது வழக்கு
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறையில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் வீடு கட்டுவதாக இவர் மீதும், அதே பகுதியில் வீடு கட்டும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

காண்டிராக்டருக்கு நடிகர் பாபி சிம்ஹா பல லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்தது. ஜமீரின் உறவினர் உசேனும் பாபி சிம்ஹாவும் பள்ளி நண்பர்கள் என்பதால் இந்த கட்டிட பணிகளை அவர் ஒத்துக் கொண்டார்.

இந்நிலையில் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் காண்டிராக்டர் ஜமீரின் உறவினர் உசேன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள எனது தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கே.ஜி.எப். படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் வந்து வீடு கட்டும் பிரச்சினையில் தலையிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பேரில் நடிகர்கள் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com