கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் விபத்தில் பலி- 100 மீட்டர் தூரம் உடல் இழுத்து செல்லப்பட்ட பரிதாபம்

விபத்தில் காயம் அடைந்த பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை படத்தில் காணலாம்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை படத்தில் காணலாம்.
Published on

திருநாவலூர்:

திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். (வயது 50).இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வள்ளி (43) என்பவருடன் சென்னை நோக்கி புறப்பட்டார்.

இந்த மோட்டார் சைக்கிள் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலை தனியார் பால்பண்ணை பகுதியில் சென்றது. அப்போது பாலமுருகன் மோட்டார் சைக்கிளுடன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது வேப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதோடு வள்ளியின் உடல் காரில் சிக்கியது. சுமார் 100 மீட்டர் தூரம் அவரது உடல் இழுத்து செல்லப்பட்டது. இதனால் வள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனைபார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பாலமுருகன் உயிருக்கு போராடினார். உடனே அவரைமீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து உள்ளனர். காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com