பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல் - 3 என்ஜினீயர்கள் பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதின.
Accident
Published on

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர்சங்கர் (37). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருடன் அரி யலூர் மாவட்டம் அரிசா னத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30), சன்னாநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்தி (21) ஆகியோரும் என்ஜி னீயர்களாக பணியாற்றி வந்தனர்.

கார்-லாரி மோதி விபத்து

இந்தநிலையில் பணிநிமித்தமாக 3பேரும் கேரளா சென்றனர். அங்கு பணிகள் முடிந்ததும் விஜய், சக்தி ஆகியோர் தங்களது சொந்த ஊரான அரியலூர் சென்று விட்டு அங்கிருந்து சென்னை செல்ல திட்ட மிட்டனர். இதையடுத்து 3பேரும் கேரளாவில் இருந்து அரியலூருக்கு காரில் புறப்பட்டனர்.

இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் டி. களத்தூர் கிராமம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து துறையூர் நோக்கி கனரக லாரி வந்து கொண்டிருந்தது. அதனை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஜலீல் பாஷா ஷேக் ஓட்டி வந்தார். இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதின. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com