கார் மீது பஸ் மோதி விபத்து- அ.தி.மு.க. பிரமுகர் படுகாயம்

தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மீது பஸ் மோதி விபத்து- அ.தி.மு.க. பிரமுகர் படுகாயம்
Published on

கடத்தூர்:

கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.

அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com