

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார்.
இதில், சுகாதாரத் துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்றும் இதற்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய் கேர் மையங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். இதற்காக, ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.