போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்த கொடுமை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

ஹான்ஸ் எனப்படும் போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகல் குளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த செயலை செய்தது தெரிய வந்துள்ளது.
போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்த கொடுமை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவனுக்கு, சில வாலிபர்கள் சேர்ந்து ஹான்ஸ் எனப்படும் போதை மருந்தை சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை வைத்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகல் குளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் சேர்ந்து, அந்த சிறுவனுக்கு போதை மருந்தை வழங்கியது தெரிய வந்துள்ளது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com