சென்னை, கோவையில் 5 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் 5 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை விமான நிலையத்தில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை- கோவை விஸ்தாரா விமானம், டெல்லி- கோவை விஸ்தாரா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com