கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோடை விடுமுறை சீசன் காரணமாக தற்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.

தொடர்ந்து இன்று வரை கடந்த 11 நாட்களில் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் படகுமூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.

இன்றும் காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com